Friday, January 3, 2025

வெந்து தணிந்தது காடு புது அப்டேட் போடு

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தமிழ் சினிமாவுடனே சேர்ந்து வளர்ந்து வந்த சிம்புவுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு.

ஏற்ற இறக்கமாக நகரும் சிம்புவின் திரைப்பயணத்தில் வந்தா ராஜாவாதான் வருவேன் மற்றும் ஈஸ்வரன் படங்கள் சற்றே சறுக்கிய நிலையில், கடைசியாக வெளியான மாநாடு படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

சிம்புவின் அடுத்த படமான வெந்து தணிந்தது காடு செப்டம்பர் 15 ரிலீஸ் ஆக உள்ளதாக ஏற்கனவே அறிவிப்பு வந்த நிலையில், தற்போது படத்தின் இரண்டாவது பாடல் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

படத்திற்கு பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டு வந்தாலும் படக்குழுவினரிடம் இருந்து அதிகாரபூர்வ தகவல்கள் கிடைக்காததால் படத்தை குறித்த புது அப்டேட் வழங்குமாறு சிம்பு ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

Latest news