தங்கம் விலை நேற்று கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.12,830க்கு விற்பனை செய்யப்பட்டது. சவரனுக்கு ரூ.580 உயர்ந்து ரூ.1,02,640க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், தங்கம் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி, தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.1,02,960க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.40 உயர்ந்து ரூ.12,870க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலை ஒரே நாளில் கிலோவுக்கு ரூ. 12,000 உயர்ந்து ஒரு கிலோ ரூ.2,83,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.12 உயர்ந்து ஒரு கிராம் ரூ.283க்கு விற்பனை செய்யப்படுகிறது.
