இந்தாண்டு தொடக்கம் முதலே தங்கம் விலை ஏற்ற, இறக்கமாகவே இருந்து வருகிறது. அதேபோல் வெள்ளி விலையும் வரலாற்றிலேயே அதிகளவில் உயர்ந்துள்ளது.
இந்த திடீர் உயர்வால் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இருப்பினும், சமீபத்தில் வெள்ளி விலையில் சிறிய அளவிலான சரிவு ஏற்பட்டதால், மக்களுக்கு சற்று நிம்மதி கிடைத்தது.
தொழில்துறைகளில் வெள்ளிக்கான தேவை கடந்த சில ஆண்டுகளில் கணிசமாக அதிகரித்துள்ளது. முன்பு நகைகள் மற்றும் பூஜை பொருட்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்ட வெள்ளி, இப்போது மொபைல் போன்கள், கணினிகள், மின்னணு சாதனங்கள், சோலார் பேனல்கள் போன்றவற்றிலும் அவசியமான பொருளாக மாறியுள்ளது.
தொழில்நுட்ப வளர்ச்சி அதிகரித்து வருவதால், வெள்ளியின் பயன்பாட்டும் அதே அளவில் உயரும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக, வெள்ளி விலை எதிர்காலத்தில் மேலும் உயரக்கூடும் எனவும் அவர்கள் கணித்துள்ளனர்.
