குளிர்காலத்தில் மீன் சாப்பிட்டா இவ்ளோ நல்லதா?

152
Advertisement

பாக்டீரியா மற்றும் வைரஸ் கிருமிகள் பெருகுவதற்கு குளிர்காலத்தில் சாதகமான சூழல் இருப்பதால், நோய் தொற்று ஏற்படும் வாய்ப்புகள் வெகுவாக அதிகரிக்கிறது. பருவ கால உடல் உபாதைகளை தடுக்க, ஊட்டச்சத்து மிக்க உணவுகளை உட்கொள்வது அவசியம்.

அந்த உணவுகள் தட்பவெப்ப நிலையில், உடலுக்கு குளிர்ச்சியை உண்டாக்காமல் இருப்பதாக பார்த்து கொள்ள வேண்டும். இதனாலேயே, இவை இரண்டும் கிடைக்க கூடிய மீன் குளிர்காலத்தில் சாப்பிட ஏற்ற உணவாக உள்ளது. ஒமேகா 3 கொழுப்பு நிறைந்த மீனை உணவில் சேர்த்து கொள்ளும்போது, நுரையீரலில் காற்றோட்டம் அதிகமாகும்.

இது சளி, இருமல் பாதிப்புகள் ஏற்படாமல் தவிர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த ஒமேகா கொழுப்பு குளிர்காலத்தில் ஏற்படும் தோல் வறட்சியை சரி செய்து, தோலின் எண்ணைத்தன்மையை தக்க வைக்கிறது. குளிர்காலத்தில் திடீரென தாக்கும் பக்கவாத நோயில் இருந்து மீன் பாதுகாப்பு அளிக்கிறது. மீனில் உள்ள ஒமேகா கொழுப்புகள் மூளை சிறப்பாக செயல்பட ஊக்கமளிக்கும்.

மேலும், மீன் உணவுகள் தாய்மார்களுக்கு  மிகவும் நன்மை பயக்குவதாக அமையும். மீனில் உள்ள நல்ல கொழுப்பு இதயநோய் ஏற்படும் வாய்ப்புகளை வெகுவாக குறைப்பதால் வாரம் ஒரு முறை உணவில் மீன் சேர்த்து கொள்ள இதய நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

சூரிய ஒளியில் அதிகமாக கிடைக்கும் விட்டமின் டி, மீனிலும் கிடைப்பதால் வெயில் குறைவாக இருக்கும் குளிர்காலங்களில், மீன் சாப்பிடுவதால், உடலில் விட்டமின் டி குறைபாடு ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது. மன அழுத்தத்தையும் குறைக்கும் ஒமேகா கொழுப்புகள் கண்பார்வைக்கு நல்ல ஊக்கமளிப்பது குறிப்பிடத்தக்கது.