Tuesday, March 11, 2025

சித்தார்த்துடன் வீடியோ வெளியிட்ட ஆதிதி! விரைவில் டும் டும் டும்? 

சித்தார்த்தும் ஆதிதி ராவும் 2021ஆம் ஆண்டு ‘மஹா சமுத்திரம்’ படத்தில் இணைந்து நடித்தனர். அப்போதில் இருந்தே இருவரும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

இதற்கு ஏற்றார் போல, பல சந்தர்ப்பங்களில் சித்தார்த்தும் ஆதிதியும் இருக்கும் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வட்டமடித்து வந்துள்ளன. 2022ஆம் ஆண்டு சித்தார்த் பிறந்தநாளன்று ஆதிதி போஸ்ட் செய்த பதிவும் கவனம் ஈர்த்தது. 

இந்நிலையில், இன்ஸ்டாகிராமை ஆக்கிரமித்து வரும் ‘மாலை டம் டம்’ பாடலுக்கு சித்தார்த்துடன் இணைந்து ஆதிதி ரீல்ஸ் செய்துள்ளார்.

இதையடுத்து, இது வெறும் ட்ரெண்டுக்காக செய்ததா அல்லது இருவரும் தங்கள் relationship status பற்றி அறிவிக்க போகின்றனரா போன்ற கேள்விகள் ரசிகர்களிடையே அதிகரித்து வருகின்றது.

Latest news