கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் காயமடைந்தார். இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர் அலெக்ஸ் கேரி அடித்த பந்தை ஸ்ரேயாஸ் ஐயர் பின்னோக்கி ஓடி சென்று அற்புதமாக பிடித்தார். ஆனால் பந்தை பிடித்த பின் நிலைதடுமாறிய அவர் கீழே விழுந்தார். அதில் அவருக்கு இடது விலா எலும்பில் காயம் ஏற்பட்டது.
இதையடுத்து ஸ்ரேயாஸ் ஐயர் சிட்னியில் உள்ள மருத்துவமனையின் ஐசியூ-வில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஸ்ரேயாஸ் ஐயரின் உடலுக்குள் ரத்தக்கசிவு இருப்பதால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது.
இந்த நிலையில், ஸ்ரேயாஸ் அய்யர் தற்போது மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். ஷ்ரேயாஸ் அய்யர் உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
