சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் கோயில் காவலாளி அஜித்குமார் விசாரணைக்காக அழைக்கப்பட்டு, காவல் நிலையத்தில் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 5 காவல்துறையினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தை கண்டித்து பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் காவலாளி அஜித்குமாரை போலீசார் தாக்கும் வீடியோ காட்சி தற்போது பரவி வருகிறது.