Tuesday, September 2, 2025

2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் குறித்து ரிசர்வ் வங்கி சொன்ன ஷாக் தகவல்

5 ஆயிரத்து 956 கோடி மதிப்பிலான 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் தற்போதுவரை வங்கிக்கு திரும்பவில்லை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக கடந்த 2023ம் ஆண்டு மே மாதம் 19ஆம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது என்றும் அப்போது 3.56 லட்சம் கோடி மதிப்பிலான 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தது எனவும் கூறப்பட்டுள்ளது.

இரண்டு ஆண்டுகளை கடந்த பின் தற்போது 5 ஆயிரத்து 956 கோடி மதிப்பிலான நோட்டுகள் வங்கிக்கு திரும்பவில்லை என்றும், இதன்மூலம் 98.33 சதவீத 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்பப்பெறப்பட்டன’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிசா்வ் வங்கியின் 19 கிளை அலுவலகங்களிலும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், இந்த அலுவலகங்கள் மூலம் தனிநபா்கள் மற்றும் நிறுவனங்கள் அவா்களது வங்கிக்கணக்கில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை சேமிப்புக் கணக்கில் செலுத்தவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

மேலும், இந்தியாவில் எந்தவொரு தபால் நிலையத்தில் இருந்து இந்தியா போஸ்ட் மூலம் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை அனுப்பி தங்கள் சேமிப்புக் கணிக்கில் செலுத்திக்கொள்ள முடியும் எனவும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News