நாமக்கல் மண்டலத்தில் உற்பத்தி செய்யப்படும் முட்டைகளுக்கான விலை நாமக்கல்லில் உள்ள தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு தினமும் நிர்ணயித்து வருகிறது.
அதன்படி முட்டை ஒன்றின் கொள்முதல் விலை இன்று 5 காசுகள் உயர்த்தப்பட்டு 5 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 11 மாதங்களுக்கு பிறகு முட்டை விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது.
50 ஆண்டு கால கோழிப்பண்ணை வரலாற்றில் இதுவே அதிகபட்ச விலை ஆகும். இது கொள்முதல் விலை மட்டுமே. சில்லறை விற்பனையில் முட்டை ஒன்று 6 ரூபாய் 50 காசுகள் முதல் 7 ரூபாய் வரை விற்பனை செய்யப்படும்.
வடமாநிலங்களில் குளிர்காலம் துவங்கியதால் அங்கு முட்டை உற்பத்தி குறைந்துள்ளதாகவும், இனி வருங்காலங்களில் முட்டையின் விலை நாமக்கல்லில் அதிகபட்சமாக 6 ரூபாய் வரை உயரக்கூடும் எனவும் பண்ணையாளர்கள் கூறியுள்ளனர்.
