காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே, 35 செம்மறி ஆடுகள் மர்மமான முறையில் இறந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அடுத்த வில்லிவலம் பகுதியை சேர்ந்த விவசாயி மாசிலாமணி ஆடுகள் வளர்த்து வருகிறார். மேய்ச்சலுக்கு சென்றுவிட்டு வந்த ஆடுகளை இரவு கொட்டகையில் அடைத்து விட்டு மாசிலாமணி வீட்டுக்கு சென்றார்.
காலையில் சென்று பார்த்தபோது, 35 ஆடுகள் வாயில் நுரை தள்ளியபடி இறந்து கிடந்தன. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசாரும் மற்றும் கால்நடை பராமரிப்பு துறையினரும் மர்மமான முறையில் இறந்த ஆடுகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.