Wednesday, December 17, 2025

ரூபாய் நோட்டுகளுக்கு கடுமையான பற்றாக்குறை – ரிசர்வ் வங்கிக்கு பறந்த கடிதம்

நாடு முழுவதும் ரூ.10, ரூ.20, ரூ.50 போன்ற சிறிய மதிப்பு ரூபாய் நோட்டுகளுக்கு கடுமையான பற்றாக்குறை உள்ளதாக அகில இந்திய ரிசர்வ் வங்கி ஊழியர் சங்கம் (AIBEA) திங்கள்கிழமை எச்சரித்துள்ளது. இது சாதாரண மக்கள், சிறு வணிகங்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.

நகர்ப்புற, கிராமங்களில் இந்நோட்டுகள் கிட்டத்தட்ட கிடைக்கவில்லை என சங்கம் RBI துணை ஆளுநர் டி. ரபி சங்கருக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது. ரூ.100, 200, 500 நோட்டுகள் எளிதில் கிடைக்கின்றன என்றாலும், ஏ.டி.எம்., வங்கிகள் சிறு நோட்டுகளை வழங்க முடியவில்லை.

உள்ளூர் போக்குவரத்து, மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட தினசரி பரிவர்த்தனைகளுக்கு இது கடினமாகியுள்ளது. டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்தாலும், நோட்டு புழக்கம் வளர்ச்சியடைகிறது. சிறு நோட்டுகளுக்கு நாணயங்கள் மாற்றம் பலனளிக்கவில்லை.

வணிக வங்கிகள், RBI கவுண்டர்கள் மூலம் போதுமான சிறு நோட்டுகள் புழக்கத்தை உறுதி செய்ய வேண்டும் என AIBEA கூறியுள்ளது.

Related News

Latest News