ஈரானில், கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளதால், செயற்கை மழைப் பொழிவை ஏற்படுத்த அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.
ஈரான் நாட்டில் கடந்த 6 ஆண்டுக்கும் மேலாக வறட்சி நிலவி வருகிறது. ஈரானில் உள்ள அணைகளில் நீர் இருப்பு 10 சதவீதத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. மேலும், தற்போது ஈரானில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. கடுமையான தண்ணீர் பஞ்சமும் ஏற்பட்டுள்ளது. இதனால், ஈரானில் செயற்கை மழைப்பொழிவை ஏற்படுத்த அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.
