Thursday, February 5, 2026

மீண்டும் போராட்டம்., டிரம்புக்கு எதிராக திரண்ட 70 லட்சம் அமெரிக்கர்கள்

அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரி மாதம் டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறையாக பதவியேற்றார். அதிபராக பதவி ஏற்றதில் இருந்து டிரம்ப் மேற்கொள்ளப்பட்டு வரக்கூடிய பல்வேறு நடவடிக்கைகளும் அந்நாட்டு மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி வருகின்றன.

இந்நிலையில் No Kings என்ற பெயரில் அமெரிக்காவின் 50 மாநிலங்களில் 2700 இடங்களில் டிரம்புக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்றன. டிரம்ப் நிர்வாகத்தையும் டிரம்பின் கொள்கைகளையும் எதிர்த்து லட்சக்கணக்கான மக்கள் அமெரிக்காவின் பல்வேறு நகரங்களிலும் ஒன்று திரண்டு மிகப்பெரிய அளவிலான போராட்டத்தை நடத்தி இருக்கின்றனர்.

சனிக்கிழமை அன்று அமெரிக்கா முழுவதும் நடைபெற்ற இந்த போராட்டத்தில் 70 லட்சம் மக்கள் பங்கேற்றனர். இந்த ஆண்டில் மட்டும் டிரம்புக்கு எதிராக நடைபெறக்கூடிய மூன்றாவது மிகப்பெரிய மக்கள் போராட்டம் இதுவாகும்.

டிரம்ப் இந்த நாட்டின் மன்னர் கிடையாது அவர் போடும் உத்தரவுகளை நாங்கள் ஏற்க வேண்டும் என்று அவசியமும் கிடையாது என பலரும் தெரிவித்தனர். நாடு முழுவதும் அமைதியான முறையில் இந்த போராட்டங்கள் நடைபெற்றன எந்த பகுதியிலும் எந்த ஒரு வன்முறையோ அல்லது மோதல்களோ ஏற்படவில்லை .

Related News

Latest News