Monday, February 16, 2026

பண பரிமாற்றத்திற்கு சேவை கட்டணம் : SBI யின் அறிவிப்பால் வாடிக்கையாளர்கள் ஷாக்

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான State Bank of India (எஸ்பிஐ) ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகளுக்கு சேவை கட்டணம் விதிப்பதாக அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பின் படி, ரூ.25,000-க்கு மேற்பட்ட தொகையை செல்பேசி செயலி, இணைய வங்கி சேவை உள்ளிட்ட ஆன்லைன் வழிகளின் மூலம் பரிமாற்றம் செய்தால் சேவை கட்டணம் வசூலிக்கப்படும்.

குறிப்பாக, ஐஎம்பிஎஸ் (IMPS) முறையில் ரூ.25,000-க்கு மேல் முதல் ரூ.1,00,000 வரை பணம் அனுப்பினால் ரூ.2 மற்றும் அதற்கு ஜிஎஸ்டி வசூலிக்கப்படும். அதேபோல், ரூ.1,00,000-க்கு மேல் முதல் ரூ.2,00,000 வரை ஐஎம்பிஎஸ் பரிவர்த்தனை மேற்கொண்டால் ரூ.6 மற்றும் அதற்கான ஜிஎஸ்டி வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சேவை கட்டணம் மற்றும் ஜிஎஸ்டி, எஸ்பிஐ இணைய வங்கி சேவை, செல்பேசி செயலி மற்றும் யோனோ செயலி வழியாக செய்யப்படும் பணப் பரிவர்த்தனைகளுக்கு பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது.

புதிய விதிமுறைகளின்படி, ரூ.25,000-க்குள் செய்யப்படும் பணப் பரிவர்த்தனைகளுக்கு எந்த சேவை கட்டணமும், ஜிஎஸ்டியும் இல்லை. எஸ்பிஐயின் இந்த புதிய நடைமுறை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

Related News

Latest News