சென்னை சைதாப்பேட்டையில் சின்னத்திரை நடிகை ராஜேஸ்வரி (39) ரத்த அழுத்த மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ராஜேஸ்வரி. 39 வயதான இவர் தொலைக்காட்சிகளில் துணை நடிகையாக நடித்து வந்துள்ளார்.
பாரிமுனையில் கணவர், குழந்தைகளுடன் வசித்து வந்த நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 8ஆம் தேதி சைதாப்பேட்டையில் உள்ள தாய் வீட்டுக்கு வந்துள்ளார்.
அப்போது அவர், அதிக அளவில் மாத்திரைகளை சாப்பிட்டார். இதில் மயங்கி விழுந்த அவரை உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனளிக்காமல் அவர் இன்று காலையில் பரிதாபமாக உயிரிழந்தார். இது பற்றி தகவல் கிடைத்ததும் சைதாப்பேட்டை போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
