கேரளாவை சேர்ந்த பிரபல நடிகர் விஷ்ணு பிரசாத். மலையாள திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்து வந்தார். கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு வந்த இவர் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி விஷ்ணு பிரசாத் உயிரிழந்தார். நடிகரின் குடும்பத்தினருக்கு மலையாள திரையுலகை சேர்ந்தவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.