சாதிய ஆணவக் கொலையை தடுக்க தனி சட்டம் இயற்ற வேண்டும் என கூட்டணிக் கட்சித் தலைவர் முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சர் இல்லத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் ஆகியோர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து கேட்டறிந்தனர். மேலும், சாதிய ஆணவக் கொலையை தடுக்க தனி சட்டம் இயற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.