Monday, December 22, 2025

உதயநிதி காலில் விழுந்த திமுகவின் மூத்த MLA.. வைரல் வீடியோ..

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக திண்டுக்கல் மாவட்டம் சென்றுள்ள நிலையில், நேற்று வேடசந்தூரில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சி மேடையில் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் திண்டுக்கல் பெரியசாமி உள்ளிட்ட பலர் இருந்தனர்.

அப்போது வேடசந்தூர் எம்.எல்.ஏ. காந்திராஜன் உதயநிதி, அமைச்சர் பெரியசாமிக்கு மாலை அணிவித்து விட்டு, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு மாலை அணிவித்து அவரது காலை தொட்டு வணங்கினர். இந்த நிகழ்வு வைரலாகிய நிலையில் பெரும் பேசுபொருளாகியது.

அதாவது, 74 வயதான எம்.எல்.ஏ., தனது மகன் வயதுடைய உதயநிதி ஸ்டாலின் காலில் விழந்து ஆசி பெறலாமா?. ஓஹோ இதான் திமுக கற்றுத் தந்த சுயமரியாதையா, இதுதான் திமுக சமூக நீதி ஆட்சியா….? என வீடியோ சமூக வலைத்தளங்களில் சமூக ஆர்வலர்கள் மற்றும் நெட்டிசன்கள் கேள்விகளை எழுப்பினார்.

இந்த காந்திராஜன் துணை சபாநாயகராகவும், அதிமுக சார்பிலும் எம்.எல்.ஏ.-வாகவும் இருந்துள்ளார்.

Related News

Latest News