காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி டெல்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். வழக்கமான உடல் பரிசோதனைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சோனியா காந்தி உடல்நிலை சீராக உள்ளது. நாள்பட்ட இருமல் பிரச்சனை உள்ளதால் அவர் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்கு வந்துள்ளார். நுரையீரல் டாக்டரின் கண்காணிப்பில் உள்ளார். டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசு காரணமாக அவர் தொடர்ந்து மருத்துவ பரிசோதனைக்கு வருகிறார் என அதில் கூறப்பட்டுள்ளது.
