டாஸ்மாக் மீதான ஊழல் புகார் குறித்து தமிழ்நாடு அரசுக்கு எதிராக தமிழக பாஜக சார்பில் சென்னை எழும்பூரில் போராட்டம் நடத்த திட்டமிட்டது.
இந்த நிலையில் போராட்டத்திற்கு அனுமதி மறுத்து வீட்டு காவலில் வைக்கப்பட்ட பாஜக மூத்த தலைவர் தமிழிசை, போராட்டத்தில் பங்கேற்க புறப்பட்ட நிலையில், கைது செய்யப்பட்டார்.
தாளமுத்து நடராஜன் மாளிகை நோக்கி செல்ல முயன்ற தமிழிசை, விருகம்பாக்கத்தில் உள்ள இல்லத்தின் முன் கைது செய்யப்பட்டார். அவரை காவல்துறை வாகனத்தில் ஏற்றிய போது பாஜகவினர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மக்கள் பணத்தில் முறைகேடு செய்த அமைச்சர் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட வேண்டும் என்றும் ஆயிரம் கோடி ரூபாய் என்பது தொடக்கம்தான். பல லட்சம் கோடி அளவுக்கு ஊழல் நடந்திருக்கிறது எனவும் குறிப்பிட்டார்.