ஈரோடு அருகே விஜயமங்கலம் சரளையில் இன்று (வியாழக்கிழமை) த.வெ.க. சார்பில் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதற்காக அங்கு 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 60 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன.
இந்த நிலையில், விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் சட்டை பாக்கெட்டில் ஜெயலலிதா படத்துடனும், தவெக கரை வேட்டியுடன் செங்கோட்டையன் கலந்து கொண்டுள்ளார். இதுதொடர்பான புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
