அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சரும் கோபிச்செட்டிபாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.செங்கோட்டையன், நேற்று தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து நேற்று மாலை, சென்னை பட்டினம்பாக்கம் பகுதியில் உள்ள த.வெ.க. தலைவர் விஜயின் வீட்டுக்கு வருகை தந்த அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்நிலையில் இன்று காலை சென்னையில் பனையூருக்கு சென்ற செங்கோட்டையன் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார். அவருக்கு த.வெ.க நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
