பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜையை முன்னிட்டு நேற்று டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் செங்கோட்டையன் ஆகியோர் ஒன்றாக சென்று பசும்பொன்னில் மரியாதை செலுத்தினர். அதைத் தொடர்ந்து சசிகலாவையும் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கு முன்னதாகவே அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், கட்சி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். அதே சமயத்தில் எடப்பாடி பழனிசாமியால் வெளியேற்றப்பட்ட நிர்வாகிகளை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கெடுவும் விதித்திருந்தார்.
இந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் அவரது கட்சி பதவிகள் பறிப்புக்குள்ளானார். இந்த நிலையில் நேற்று பசும்பொன்னில் நடந்த தேவர் ஜெயந்திக்கு சென்ற செங்கோட்டையன், ஓபிஎஸ், டிடிவி தினகரனுடன் இணைந்து தேவர் சிலைக்கு மாலை அணிவித்தார். அதன் பின்னர் OPS-யுடன் ஒரே காரில் பயணம் செய்து பசும்பொன்னிற்கு செங்கோட்டையன் சென்றார். அத்துடன் மூவரும் சேர்ந்து செய்தியாளர்களையும் சந்தித்தனர். மேலும் சசிகலாவுடனும் செங்கோட்டையன் சந்தித்து பேசியிருந்தார். கட்சி பதவி பறித்ததற்கு செங்கோட்டையனிடம் சசிகலா வேதனை தெரிவித்த போது கட்சியில் இருந்து நீக்கினாலும் மகிழ்ச்சிதான் என செங்கோட்டையன் கூறியிருந்தாராம்.
இந்த நிலையில் தற்போது செங்கோட்டையன் அதிமுக நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார்.
