பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ஷேக் ஹசீனாவை டாக்காவிற்கு திருப்பி அனுப்ப இந்தியாவுக்கு வங்கதேசம் கடிதம் அனுப்பியுள்ளது.
வங்கதேசத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் போராட்டம் நடைபெற்றது. அப்போது அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவிற்கு வந்தடைந்தார்.
டாக்காவை தளமாகக் கொண்ட சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் ஹசீனா மற்றும் பல முன்னாள் கேபினட் அமைச்சர்கள், ஆலோசகர்கள் மற்றும் ராணுவம் மற்றும் சிவில் அதிகாரிகளுக்கு ‘மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை’க்காக கைது வாரண்ட்களை பிறப்பித்துள்ளது.
இந்நிலையில் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ஷேக் ஹசீனாவை டாக்காவிற்கு திருப்பி அனுப்ப இந்தியாவுக்கு வங்கதேச இடைக்கால அரசு கடிதம் அனுப்பியுள்ளது.