புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் நேற்று இரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு, கல்வி அமைச்சர் நமச்சிவாயம் விடுமுறை அறிவித்துள்ளார்.
கனமழை எதிரொலியாக, புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் வகுப்புகளும், இன்றைய தினம் நடக்க இருந்த செமஸ்டர் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டன. ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் மற்றொரு நாளில் நடைபெறும் என்று பல்கலைக்கழக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
