Tuesday, December 23, 2025

தமிழ்நாட்டில் மனுநீதிச் சோழன் ஆட்சி நடக்கிறது – செல்வப்பெருந்தகை

தமிழ்நாட்டில் மனுநீதிச் சோழன் ஆட்சி நடைபெற்று வருவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் விவாதம் நடத்தப்பட்டது.

இந்த விவாதத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை பேசியதாவது: அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கையும் காவல்துறையின் அணுகுமுறையையும் மக்கள் பார்த்துக் கொண்டு இருக்கின்றனர். தமிழ்நாட்டில் மனுநீதிச் சோழன் ஆட்சி நடைபெற்று வருகின்றது. தொலைக்காட்சியை பார்த்து தெரிந்து கொண்ட முதல்வர் நம்முடைய முதல்வர் இல்லை” எனத் தெரிவித்தார்.

முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியை விமர்சிக்கும் வகையில் செல்வப்பெருந்தகை பேசுவதாக அதிமுக எம்எல்ஏ அமளியில் ஈடுபட்டனர்.

Related News

Latest News