தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கடந்த 2019 மக்களவை தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக தலைவர் ராகுல்காந்தி, தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் இணைந்து மேற்கொண்ட பரப்புரையினால் அமோக வெற்றி கிடைத்தது. அதனைத் தொடர்ந்து 2021 சட்டமன்றத் தேர்தலிலும் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. தி.மு.க. ஆட்சி அமைந்து, இன்று ஐந்தாம் ஆண்டில் காலடி பதித்து மகத்தான சாதனைகளை புரிந்து வருகிற நிலையில் திசையெங்கும் மக்கள் பாராட்டுகிற மகத்தான ஆட்சி புரிகிற முதலமைச்சர் மு.க. எஸ்டாலின் அவர்களை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக மனதார பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன்.
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. தலைவர் எஸ்டாலின் அவர்கள் வழங்கிய 505 வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை அவர் நிறைவேற்றியிருக்கிறார். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியதோடு,கொடுக்காத வாக்குறுதிகளையும் நிறைவேற்றியிருக்கிறார், அவரது சாதனைகளின் சிகரமாக கலைஞர் மகளிர் உரிமை திட்டம், முதலமைச்சரின் காலை உணவு திட்டம், புதுமைப் பெண் திட்டம், விடியல் பயணம் ஆகியவற்றில் மிகச் சிறந்த அளவில் மக்கள் பயனடைந்து வருகின்றனர்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.