Monday, December 23, 2024

இளங்கோவனின் மறைவு காங்கிரசுக்கு மிகப்பெரிய இழப்பு – செல்வப்பெருந்தகை

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏவுமான ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். 

நுரையீரல் சார்ந்த பிரச்சனை இருப்பதாக மருத்துவர்கள் உறுதி செய்ததை அடுத்து அவருக்கு சென்னை மியாட் மருத்துவமனையில் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில் : ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் மறைவு காங்கிரசுக்கு மிகப்பெரிய இழப்பு. அனைவராலும் தன்மானத் தலைவர் என்று போற்றப்பட்டவர். எனக்கு தனிப்பட்ட முறையில் மிகப்பெரிய இழப்பு. எதையும் வெளிப்படையாக பேசுபவர் என அவர் கூறியுள்ளார்.

Latest news