Thursday, May 8, 2025

பிரதமர் மோடி  தான் சாட்டையை சுழற்றி உள்ளார் – முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி

மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 72 வது வார்டு பைக்காரா பகுதியில் 15 லட்சம் மதிப்பீட்டில் அமைய உள்ள புதிய நியாய விலை கடைக்கு பூமி பூஜை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களிடம் பேசுகையில்.

உலகிலேயே இந்த தீவிரவாதத்தை தடுக்க வேண்டும், எந்த நாட்டிலும் தீவிரவாதம் இருக்கக் கூடாது.! தீவிரவாதம் அடியோடு ஒழிக்கப்பட வேண்டும். பிரதமர் மோடி துணிந்து நின்று, எந்த ஒரு பிரதமரும் எடுக்காத இராணுவ நடவடிக்கையை எடுத்துள்ளார். இந்தியாவின் முன்னெடுப்புக்கு அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும்.

சாட்டையை சுழற்றுவேன், சுழற்றுவேன் என முதல்வர் ஸ்டாலின் சொன்னார். – ஆனால் தற்போது பிரதமர் மோடி தான் சாட்டையை சுழற்றி உள்ளார்.

இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

Latest news