விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காரணை பெரிச்சானூர் கிராமத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பான் மசாலா விற்பனை நடைபெறுவதாக எஸ்.பி க்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் அடிப்படையில், அவரது தனிப்படை போலீசார் இன்று காரனை பெரிச்சானூர் கிராமத்தில் உள்ள 62 வயதான முதியவர் ஞானவேல் என்பவருக்கு சொந்தமான பெட்டிக்கடையில் நடத்திய சோதனையில்,
6 மூட்டைகளில் சுமார் 62 கிலோ எடையுள்ள சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பான்மசாலா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, போதை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், ஞானவேலை கைது செய்து கண்டாச்சிபுரம் காவல் நிலையம் அழைத்து வந்து வழக்குப் பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.