இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் வீரேந்திர ஷேவாக், IPL அணிகளை வம்பிழுப்பதை வாடிக்கையாகவே வைத்துள்ளார். முன்னதாக சென்னை அணியால் கடந்த 5 வருடங்களாக, 180 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களை அடிக்க முடியவில்லை, என்று விமர்சனம் செய்தார்.
அவரின் இந்த கருத்துக்கு கிரிக்கெட் ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தநிலையில் தற்போது விராட் கோலியின் RCBயை Wanted ஆக மட்டம் தட்டியுள்ளார். நடப்பு IPL தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு சென்னை, கொல்கத்தா அணிகளை வீழ்த்தி டேபிள் டாப்பராக உள்ளது.
அதிக ரன்கள் வித்தியாசத்தில் இரண்டு அணிகளுக்கும் எதிராக, வெற்றியை பதிவு செய்ததால் நெட் ரன்ரேட்டும் உச்சத்தில் இருக்கிறது. ஆனால் ஷேவாக்கோ பெங்களூருவுக்கு எதிராக வன்மத்தைக் கக்கியுள்ளார். இதுகுறித்து அவர் அண்மையில் அளித்த பேட்டியில், ” அந்த ஏழைகள் IPL புள்ளிப்பட்டியலில் மேலே இருக்கட்டும்.
எவ்வளவு நாட்களுக்கு அவர்கள் அந்த இடத்தில் இருக்கின்றனர் என பார்க்கலாம். இங்கே நான் பணத்தை பற்றி பேசவில்லை. ஒவ்வொரு சீசனிலும் அவர்கள் 400-500 கோடிகள் சம்பாதிக்கின்றனர். இதுவரை அவர்கள் IPL கோப்பையை வெல்லாததால், நான் அவர்களை ஏழை என்று கூப்பிடுகிறேன்,” என்று கிண்டலடித்து உள்ளார்.
இதைப்பார்த்த ரசிகர்கள், ”நீங்க எத்தனை IPL கோப்பையை Win பண்ணீங்க?” என்று, சமூக வலைதளங்களில் கண்டபடி ஷேவாக்கை விமர்சனம் செய்து வருகின்றனர்.