மீண்டும் ரிலீஸ் ஆகிறது சீமானின் ‘தம்பி’ திரைப்படம்

சீமான் இயக்கத்தில் கடந்த 2006 ம் ஆண்டு வெளியான திரைப்படம் தம்பி. இப்படத்தில் மாதவன், பூஜா, வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். வித்யாசாகர் இப்படத்திற்கு இசை அமைத்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், தம்பி திரைப்படம் மீண்டும் ரிலீஸ் ஆக உள்ளது. வரும் பிப்ரவரி மாதம் தம்பி படத்தை திரைக்கு கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது.

Related News

Latest News