சீமான் இயக்குநர் என்பதால் ஒரு நடிகரை விட சிறப்பாக நடிக்க முடியும் என்று காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாக்கூர் விமர்சித்துள்ளார்.
விருதுநகர் அருகே உள்ள கூரைக்குண்டு மற்றும் நந்தி ரெட்டிபட்டி ஊராட்சிகளில் 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட இரண்டு மக்கள் அரங்கத்தை காங்கிரஸ் கட்சியின் விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாகூர் திறந்து வைத்தார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், விஜய் கட்சிக்கு சீமானின் வாக்குகள் அவர் கண் முன்னே செல்வதால் வீர வசனம் பேசி வருகிறார் என்று கூறினார். சீமான் இயக்குநர் என்பதால் ஒரு நடிகரை விட அவரால் சிறப்பாக நடிக்க முடியும் என்றும் கூறினார். வரும் தேர்தலில் நடிகர் மற்றும் இயக்குநரைவிட மக்கள் தான் ஜெயிப்பார்கள் என்றும் தெரிவித்தார்.
