Saturday, January 31, 2026

டில்லி இந்தியா கேட் பகுதிக்கு மக்கள் செல்ல தடை

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது இந்திய ராணுவம் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் காரணமாக எல்லையில் பதற்றம் நீடிக்கிறது.

இந்நிலையில், எல்லையோர மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. டில்லி இந்தியா கேட் பகுதியில் மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக, வரலாற்று நினைவுச்சின்னங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியா கேட், ஜும்மா மசூதி, செங்கோட்டை உள்ளிட்ட இடங்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. அரசு ஊழியர்களுக்கு விடுமுறை ரத்து செய்யப்பட்டு, அவர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளது. டில்லி விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Related News

Latest News