அமெரிக்காவில் பிறந்து ஸ்பெயினில் வாழ்ந்த மரியா பிரான்யாஸ் மொரர் என்ற பெண், 117 வயது வரை வாழ்ந்துள்ளார். உலகின் அதிக வயது பெண்ணாக கருதப்பட்ட அவர், 2024 ஆகஸ்ட் மாதம் உயிரிழந்தார். அவருடைய மரணத்துக்குப் பிறகு, விஞ்ஞானிகள் அவருடைய இரத்தம், சிறுநீர் ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.
அதில் மரியா பிரான்யாஸ் ஒவ்வொரு நாளும் மூன்று முறை யோகர்ட் (தயிர்) சாப்பிட்டதுதான் சிறப்பானது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். தினமும் மூன்று முறை யோகர்ட் சாப்பிட்டது அவரது நீண்ட ஆயுளுக்கு ஒரு முக்கிய காரணம் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள். மேலும் அவருக்கு மது அருந்துதல், புகை பிடித்தல் போன்ற பழக்கங்கள் இல்லை. ஒழுங்கான நடை பயிற்சி செய்தார்.
யோகர்ட் என்றால் என்ன?
தயிர் போலவே கெட்டியாக இருக்கும் யோகர்ட், தயிரை விட அதிக ஊட்டச்சத்து கொண்டது. இதில் பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் உள்ளது. இது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது. வயிற்றுக்கு திருப்தியான உணர்வை வழங்குகிறது.

சிறுவர் முதல் பெரியோர் வரை வயது வேறுபாடின்றி விரும்பிச் சாப்பிடும் உணவுப்பொருளாக யோகர்ட் காணப்படுகின்றது. யோகர்ட்டை தொடர்ந்து உட்கொள்வது நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது, பல்வேறு நோய் தொற்றுகளில் இருந்து நம் உடலைப் பாதுகாக்கிறது.