Sunday, December 28, 2025

கூகுளில் ’67’ என்று தேடிப்பாருங்கள்., ஒரு மேஜிக் நடக்கும்..!

நீங்கள் கூகுளில் 67 என்ற எண்ணை தேடினால், உங்கள் திரையில் ஒரு சிறிய மாயாஜாலம் நடக்கும். இந்த ட்ரெண்ட் தற்போது இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. பலரும் தங்கள் மொபைல் மற்றும் லேப்டாப்புகளில் இந்த புதிய ட்ரிக்கை முயற்சி செய்து ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைந்து வருகின்றனர்.

அதாவது, செல்போன் அல்லது லேப்டாப்பில் கூகுளை திறந்து 67 அல்லது 6-7 என்று டைப் செய்து என்டர் அழுத்தினால் போதும். சில விநாடிகளில் உங்கள் மொபைல் அல்லது லேப்டாப் திரை சற்று குலுங்குவது போல (ஷேக் ஆகுவது போல) தோன்றும். இதைப் பார்த்து யாரும் பயப்பட தேவையில்லை.

மேலும், இது உங்கள் செல்போன் அல்லது லேப்டாப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு என்று நினைக்கவும் வேண்டாம். இது கூகுள் தனது பயனர்களுக்கு வழங்கியுள்ள ஒரு சிறிய ‘சர்ப்ரைஸ்’ அம்சம் மட்டுமே. இதனால் உங்கள் சாதனங்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது.

இதுபோலவே, கூகுளில் உள்ள மற்றொரு பிரபலமான ட்ரிக் “Do a barrel roll” என்பதாகும். கூகுள் தேடலில் “Do a barrel roll” என்று டைப் செய்தால், உங்கள் திரை முழுவதுமாக 360 டிகிரி சுழன்று மீண்டும் இயல்பான நிலைக்கு திரும்பும்.

இது கூகுளின் சுவாரஸ்யமான அம்சங்களில் ஒன்றே. இதையும் பல பயனர்கள் முயற்சி செய்து மகிழ்ந்து வருகின்றனர்.

Related News

Latest News