Wednesday, March 12, 2025

“பெரியாரை ஏற்றுக்கொள்ளும் தம்பிகள் வெளியேறி போங்க” : சீமான் அதிரடி

ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றது. திமுகவை எதிர்த்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி டெபாசிட் இழந்து தோல்வி அடைந்தது. தேர்தலுக்கு முன்பு அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரியார் குறித்து பேசியதுதான் தோல்விக்கு காரணம் என பேசப்படுகிறது.

பெரியர் குறித்து சீமான் தொடர்ச்சியாக அவதூறு கருத்துக்களை தெரிவித்து வந்தது, நாம் தமிழர் கட்சியினர் இடையே பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியது. இதனால் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த பிரமுகர்கள் பலர் அடுத்தடுத்து கட்சியில் இருந்து விலகினர்.

திருச்சி விமான நிலையத்தில் வைத்து செய்தியாளர்களை சந்தித்த சீமான் : “பெரியாரை பிரபாகரனே ஏற்றுக் கொண்டாலும் நான் ஏற்க முடியாது. பெரியாரை ஏற்றுக் கொள்ளும் என்னுடைய தம்பிகள் என்னை விட்டு விலகி செல்லலாம்” என்று சீமான் தெரிவித்துள்ளார்.

Latest news