நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த ஆகஸ்ட் மாதம் 30-ந்தேதி திருத்தணி அருகே ‘மரங்களின் மாநாடு’, தொடர்ந்து கடந்த மாதம் 27-ந்தேதி தருமபுரியில் ‘மலைகளின் மாநாடு’ஆகியவற்றை நடத்தினார். அதன் பின்னர், தூத்துக்குடியில் கடல் மாநாடு, தஞ்சையில் தண்ணீர் மாநாட்டை நடத்தப்போவதாக சீமான் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள அமலி நகர் மீனவ கிராமத்திற்கு சீமான் சென்றிருந்தார். இந்த நிலையில் அங்கிருக்கும் மீனவர்களுடன் கலந்துரையாடிய அவர், கடல் மாநாடு நடத்த மீனவர்களோடு கடலுக்குள் சென்று ஆய்வு மேற்கொண்டார்.