அடேங்கப்பா இதற்கு இத்தனை மவுசா!ஆச்சரியமூட்டும் தகவல்,விலைமதிப்பற்ற ஒன்று!

415
Advertisement

தேளின் விஷத்திற்கு இவ்வளவு மவுசா என்று நீங்கள் மூக்கின் மீது விரல் வைக்கும் அளவிற்கு இந்த பதிவு உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும்.

டெத்  ஸ்டால்கர் என்னும் தேளின் விஷத்தில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளடக்கிய  பொருள் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது,இந்த தேளின் விஷத்தில் இருக்கும் புரதங்கள் கொண்டு மனிதர்களுக்கு ஏற்படும் புற்று நோய்,குடல் அழற்சி மற்றும் முடக்கு வாதம் போன்ற நோய்களை குணப்படுத்தலாமாம்.

ஆராய்ச்சியாளர்கள் இந்த விஷத்தில் இருக்கும் scorpine என்னும் பொருளை கொண்டு கொசுக்களில் இருக்கும் மலேரியாவை உண்டு பண்ணும் ஒட்டுன்னிகளை நீக்க பயன்படுத்துகிறார்கள் மற்றும் இந்த விஷத்தில் இருந்து சிறந்த வலி நிவாரணியை உருவாக்க கூடிய சாத்தியங்கள் கூட உள்ளது ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

தேள் கடித்தால் ஆயுள் முழிவதும் இதயத்தில் அடைப்பு,இதய செயலிழப்பால் ஏற்படும் இறப்பு போன்றவை ஏற்படாது என்றும் சில ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றனர்.

ஆனால் சாதாரணமாக இந்த தேளின் விஷத்தை வாங்கிவிட முடியாது,இந்த தேளின் ஒரு கலன் விஷம் 39 மில்லியன் dollor ஆகுமாம்,அதாவது இன்றைய இந்திய ரூபாய் மதிப்பில் கிட்டத்தட்ட 276.50 கோடி ரூபாய்,காசு இருப்பினும் இதை எளிதில் வாங்க இயலாதம்,ஏன் என்றால் இந்த விஷத்தின் மதிப்பு அளவற்றதாம் ,130 டாலர்கள் கொடுத்தாலே ஒரு சர்க்கரையை விட குறைவான அளவு தான் கிடைக்குமாம்.

இந்த விஷம் இவ்வளவு மதிப்பு இருப்பதற்கு காரணம்,இதில் உள்ள மருத்துவ குணம் மட்டுமல்லாமல் இதை மனிதர்கள் கைகளால் மட்டுமே எடுக்கின்றனர் என்பதாலும் இது விலை அதிகமாக இருக்கிறதாம்.

மொத்தத்தில் இந்த அதிசய விஷத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போவதால்,ஆராய்ச்சியாளர்கள் இதனை எளிதில் பெற வழிகளை கண்டுபிடித்துகொண்டு இருக்கிறார்களாம் .

தேகளிடம் இருந்து விஷத்தை எடுப்பதற்காக ரிமோட் கண்ட்ரோல் இயந்திரத்தை கண்டுபிடித்துளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.