Wednesday, December 24, 2025

தாமதமாக விடுமுறை அறிவிக்கப்பட்டதால் பள்ளி மாணவர்கள் அவதி

பெரம்பலூரில் பள்ளிகளுக்கு தாமதமாக விடுமுறை அறிவிக்கப்பட்டதால் மாணவர்கள் அவதி அடைந்தனர்.

தமிழகத்தில் பெய்த கனமழை காரணமாக, 21 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு தாமதமாக விடுமுறை அறிவிக்கப்பட்டதால் மாணவர்கள் அவதி அடைந்தனர்.

காலை 8.58 மணிக்கு, பள்ளி விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியானதால், மாணவர்கள் மழையில் நனைந்தபடி வீடுகளுக்கு திரும்பி சென்றனர். முன்கூட்டியே விடுமுறை அறிவித்திருந்தால், சிரமத்தை தவிர்த்திருக்க கூடும் என பெற்றோர்கள் கவலை தெரிவித்தனர்.

Related News

Latest News