தமிழகத்தில் ஆகஸ்ட் மாதத்தில் மாணவர்களுக்கு தொடர் விடுமுறைகள் கிடைக்கவுள்ளதால் மாணவர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.
ஆகஸ்ட் 8ஆம் தேதி வரலட்சுமி விரதம் கொண்டாடப்படவுள்ளது. இது விஷேச நாட்களாக இருப்பதால் தமிழகத்தில் பெரும்பாலான தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 9ஆம் தேதி மாதத்தின் 2வது சனிக்கிழமை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 10ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறையாகும். இதனால் பள்ளி மாணவர்களுக்கு தொடர்ச்சியாக 3 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது.
அடுத்ததாக ஆகஸ்ட் 15ஆம் தேதி வெள்ளிக்கிழமை சுதந்திர தினத்தையொட்டி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 16ஆம் தேதி சனிக்கிழமை கிருஷ்ண ஜெயந்தி விடுமுறையாகும். ஆகஸ்ட் 27ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியையொட்டி அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.