பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு முடிந்த நிலையில், டிசம்பர் மாதம் அரையாண்டு தேர்வுகள் நடைபெற உள்ளன. இதனை தொடர்ந்து மார்ச் மற்றும் ஏப்ரல் மாதம் ஆண்டு இறுதி தேர்வு நடைபெறும்.
அந்த வகையில் பள்ளி 10 வது மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தான் முக்கிய தேர்வாக இருக்கும்.
ஒவ்வொரு ஆண்டும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் முதல் வாரம் தொடங்கி 22 அல்லது 23ஆம் தேதி வரை நடைபெறும். இதனைத் தொடர்ந்து 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 3வது வாரம் தொடங்கி ஏப்ரல் முதல் வாரம் வரை நடைபெறும். இதற்கு இன்னும் 4 மாதங்களே உள்ளன. இதற்கிடையே, CBSE பொது தேர்வு அட்டவணை வெளியிடப்பட்ட நிலையில், தமிழகத்தில் நடைபெறவுள்ள பொது தேர்வுக்கான அட்டவணையை எதிர்பார்த்து மாணவர்கள் காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில், தேர்வுத்துறை இயக்குனர் சசிகலா, தேர்வு அட்டவணையை தயாரித்து அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி இருக்கிறார். இது குறித்து இன்று காலை தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வி அமைச்சர் மற்றும் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளரை சந்தித்து தேர்வ அட்டவணையை அவர் வழங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதன் படி, வரும் நவம்பர் 4ஆம் தேதி பொதுத் தேர்வு அட்டவணை வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கிறது .
