Tuesday, January 13, 2026

திடீர் கட்டண உயர்வு., SBI வங்கியில் Salary Account உள்ளவர்களுக்கு பெரும் பாதிப்பு..!

SBI வங்கியில் சம்பள கணக்கு (Salary Account) வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு, பிற வங்கிகளின் ATM-களை பயன்படுத்துவதில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன் படி, இனிமேல் மற்ற வங்கி ATM-களில் மாதத்திற்கு 10 இலவச பரிவர்த்தனைகள் மட்டுமே செய்ய முடியும். இதற்கு முன்பு, சம்பள கணக்கு வைத்திருப்பவர்கள் வரம்பில்லாமல் (Unlimited) பிற வங்கி ATM-களை பயன்படுத்த அனுமதி இருந்தது. ஆனால் தற்போது அந்த வசதி நீக்கப்பட்டு, இலவச பரிவர்த்தனைகள் எண்ணிக்கை 10 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

இந்த 10 இலவச பரிவர்த்தனைகள் முடிந்த பிறகு, பணம் எடுத்தால் ஒவ்வொரு முறையும் ரூ.23 + GST கட்டணமாக வசூலிக்கப்படும். அதேபோல், பேலன்ஸ் செக் செய்வது, மினி ஸ்டேட்மென்ட் எடுப்பது போன்ற நிதி சாரா (Non-financial) பரிவர்த்தனைகளுக்கு ரூ.11 + GST கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.

அதே நேரத்தில், SBI டெபிட் கார்டு வைத்திருப்பவர்கள் SBI சொந்த ATM-களை பயன்படுத்தும் போது எந்தவிதமான கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. SBI ATM-களில் கார்ட்லெஸ் கேஷ் வித்டிராவல் (Cardless Cash Withdrawal) வசதியும் தொடர்ந்து வரம்பில்லாமல் இலவசமாக வழங்கப்படும்.

மேலும், பேசிக் சேவிங்ஸ் பேங்க் டெபாசிட் (BSBD) கணக்குகள் மற்றும் கிசான் கிரெடிட் கார்டு (KCC) கணக்குகளுக்கு இந்த கட்டண மாற்றங்கள் பொருந்தாது. இந்த கணக்குகளுக்கு முன்பிருந்த கட்டண அமைப்பே தொடரும்.

வங்கிகளுக்கு இடையேயான பரிவர்த்தனை கட்டணங்கள் (Interchange Charges) உயர்ந்துள்ளதன் காரணமாகவே இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளதாக SBI தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, SBI வாடிக்கையாளர்கள் பிற வங்கி ATM-களை பயன்படுத்தும் போது கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஆனால், SBI சொந்த ATM-களை பயன்படுத்தினால் எந்த கூடுதல் கட்டணமும் இல்லை. எனவே, தேவையற்ற செலவுகளை தவிர்க்க, SBI வாடிக்கையாளர்கள் இனிமேல் SBI ATM-களை பயன்படுத்தி பணம் எடுப்பது சிறந்தது என அறிவுறுத்தப்படுகிறது.

Related News

Latest News