இன்றைய காலகட்டத்தில் பெண்கள் பொருளாதார ரீதியாக தன்னம்பிக்கை பெறுவது மிக முக்கியம். வீட்டு செலவுகள், பிள்ளைகளின் கல்வி மற்றும் தனிப்பட்ட கனவுகளை நிறைவேற்ற, நிதி ஆதாரம் முக்கியம். இதற்காக எதிர்கால பாதுகாப்பும் உறுதி வருமானமும் தரும் குறைந்த ரிஸ்க் சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும்.
நிலையான வட்டியுடன் கூடிய பிக்சட் டெபாசிட் (FD) 7% முதல் 9% வரை வட்டி கிடைக்கிறது. இதில் பெண்களுக்கும் மூத்த குடிமக்களுக்கும் கூடுதல் வட்டி வழங்கப்படுவதால், இது மிகவும் நம்பகமான மற்றும் பாதுகாப்பான முதலீடு ஆகும். தபால் நிலையங்களிலும் இதன் போன்ற FD திட்டங்கள் உள்ளது.
தங்கம் என்றும் மதிப்பு தொடர்புடைய முதலீடாக இருந்து வருகிறது. சிறிய அளவில் தங்கம் வாங்கி சேமித்தால், அது காலத்துடன் பெரும் சொத்தாக மாறும். மேலும் நம்பிக்கையான நகைக்கடைகள் மூலம் சிறுசேமிப்பு திட்டத்திலும் பெண்கள் ஈடுபடலாம்.
பிபிஎஃப் மற்றும் மியூச்சுவல் பண்டுகள் போன்ற சேமிப்பு வழிகளும் பெண்களுக்கு நல்ல வாய்ப்பாக இருக்கின்றன. ஷேர் மார்க்கெட் முதலீட்டில் அதிக லாபம் வாய்ப்பு இருந்தாலும், கடன் வாங்கி முதலீடு செய்ய தவிர்க்க வேண்டும்.
இவ்வற்றின் மூலம், பெண்கள் பொருளாதார ரீதியாக தன்னம்பிக்கை பெற்று வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் முன்னேற முடியும்.
