Friday, April 11, 2025

இந்தியர்களுக்கு விசா வழங்க தடை விதித்த சவுதி..! என்ன காரணம்?

சவுதி அரேபியாவில் ஹஜ் யாத்திரை முன்னிட்டு, இந்தியா உட்பட 14 நாடுகளின் விசாக்களை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இந்த நடவடிக்கை, 2025 ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2024 ஆம் ஆண்டில், அனுமதியில்லா யாத்திரிகர்கள் காரணமாக ஏற்பட்ட கூட்ட நெரிசல் மற்றும் கடுமையான வெப்பத்தால் 1,200 பேர் உயிரிழந்தனர். இதைத் தவிர்க்க, சவுதி அதிகாரிகள் விசா விதிகளை கடுமையாக்கியுள்ளனர்.

அல்ஜீரியா, வங்காளதேசம், எகிப்து, எத்தியோப்பியா, இந்தியா, இந்தோனேசியா, ஈராக், ஜோர்டான், மொராக்கோ, நைஜீரியா, பாகிஸ்தான், சூடான், துனிசியா, ஏமன் என 14 நாடுகளின் விசாக்களை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

அனுமதியின்றி ஹஜ் யாத்திரையில் பங்கேற்கும் நபர்கள் ஐந்து ஆண்டுகள் வரை தடை செய்யப்படலாம் என கூறப்பட்டுள்ளது.

Latest news