சுதந்திர போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவருமான நல்லகண்ணு (வயது 101) நேற்று காலமானார்.
உடல்நலக்குறைவு காரணமாக நல்லகண்ணு அவ்வப்போது ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 23-ந் தேதி உடல்நிலையில் திடீரென பின்னடைவு ஏற்பட்டது. இதனையடுத்து. அவருக்கு ‘வெண்டிலேட்டர்’ உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் உயிரிழந்தார்.
இந்நிலையில், மறைந்த நல்லகண்ணு உடலுக்கு சத்தியம் டிவியின் நிர்வாக இயக்குனர் டாக்டர் ஐசக் லிவிங்ஸ்டோன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். மேலும் அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
