17ஆம் ஆண்டில் சத்தியம் தொலைக்காட்சி : சசிகலா வாழ்த்து

சத்தியம் தொலைக்காட்சி 17ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளதற்கு அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் சசிகலா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது :

சத்தியம் தொலைக்காட்சி 17ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளதற்கு எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

மக்கள் அன்றாடம் சந்தித்து வரும் பிரச்னைகளை துணிச்சலாக வெளிக்கொணர்ந்து, பாரபட்சமின்றி நடுநிலையான செய்திகளை மக்களிடத்தில் கொண்டு சேர்ப்பது மற்றும் விறுவிறுப்பான விவாதங்கள் என அனைத்து விதத்திலும் சிறப்புடன் பணியாற்றி வரும் சத்தியம் தொலைக்காட்சி, வரும்காலங்களிலும் தனித்தன்மையுடன் தொடர்ந்து ஊடகத்துறையில் தனது பங்களிப்பினை சிறப்புடன் ஆற்றிட எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.

தமிழகத்தில் ஊடகத்துறையில் தனி முத்திரை பதித்து வரும் சத்தியம் தொலைக்காட்சி மென்மேலும் வளர்ச்சி கண்டு, உச்ச நிலையை அடைய வேண்டுமென தங்கள் நிறுவனத்தினருக்கும், பணியாளர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கி கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related News

Latest News