சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் 9 பேருக்கும் மரண தண்டனை விதித்து மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காவலர்கள் 9 பேருக்கும் இரட்டை மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் முழுமையான தண்டனை விவரம் வெளியாகிள்ளது.
முதல் குற்றவாளி காவல் ஆய்வாளர் ஸ்ரீதருக்கு இரட்டை மரண தண்டனையும் சிறைத் தண்டனையும் ரூ. 84 லட்சத்து 10 ஆயிரம் அபராதமும் வழங்கப்பட்டுள்ளது.
இரண்டாம் குற்றவாளி உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணனுக்கு இரட்டை மரண தண்டனையும் சிறைத் தண்டனையும் ரூ. 84 லட்சத்து 10 ஆயிரம் அபராதமும் வழங்கப்பட்டுள்ளது.
மூன்றாம் குற்றவாளி ரகு கணேஷுக்கு இரட்டை மரண தண்டனையும் சிறைத் தண்டனையும் ரூ. 50 லட்சம் அபராதமும் வழங்கப்பட்டுள்ளது.
நான்காம் குற்றவாளி முருகனுக்கு இரட்டை மரண தண்டனையும் சிறைத் தண்டனையும் ரூ. 50 லட்சம் அபராதமும் வழங்கப்பட்டுள்ளது.
ஐந்தாம் குற்றவாளி சாமிதுரைக்கு இரட்டை மரண தண்டனையும் சிறைத் தண்டனையும் 2 லட்சத்து 20 ஆயிரம் அபராதமும் வழங்கப்பட்டுள்ளது.
ஆறாம் குற்றவாளி தலைமைக் காவலர் முத்துராஜுக்கு இரட்டை மரண தண்டனையும் சிறைத் தண்டனையும் ரூ. 32 லட்சம் அபராதமும் வழங்கப்பட்டுள்ளது.
ஏழாம் குற்றவாளி செல்லதுரைக்கு இரட்டை மரண தண்டனையும் சிறைத் தண்டனையும் ரூ. 32 லட்சம் அபராதமும் வழங்கப்பட்டுள்ளது.
எட்டாம் குற்றவாளி தாமஸுக்கு இரட்டை மரண தண்டனையும் சிறைத் தண்டனையும் ரூ. 40 லட்சத்து நாற்பதாயிரம் அபராதமும் வழங்கப்பட்டுள்ளது.
ஒன்பதாம் குற்றவாளி வெயிலுமுத்துவுக்கு இரட்டை மரண தண்டனையும் சிறைத் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.
