புதிதாக தொடங்கிய கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியலில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, பசும்பொன்னில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சசிகலா பங்கேற்றார். அப்போது, தான் புதிய கட்சி தொடங்க உள்ளதாகத் தெரிவித்த அவர், அதற்கான புதிய கொடியையும் அறிமுகம் செய்து வைத்தார்.

இந்நிலையில், இன்று அந்த கட்சிக்கு “அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம்” என பெயரை அறிவித்தார். மேலும் கட்சியின் சின்னமாக தென்னந்தோப்பு சின்னத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.

Related News

Latest News