சாம்சங் எலெக்டிரானிக்ஸ் நிறுவனத்தின் இணை தலைமை செயல் அதிகாரி ஹான் ஜாங் ஹீ மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். 63 வயதான ஹான் ஜாங் ஹீ உயிரிழந்ததை சாம்சங் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் அவரது பதவியை அடுத்ததாக ஏற்க இருப்பது யார்? என்பது குறித்து சாம்சங் நிறுவனம் ஆலோசித்து வருகிறது.
கடந்த வாரம் நடைபெற்ற சாம்சங் பங்குதாரர்களிடையே உரையாற்றிய ஹான், “2025 ஆண்டு மிகவும் கடினமான ஒன்றாக இருக்கும், எனினும் நிறுவனங்களுடன் இணைதல் மற்றும் அவற்றை கைப்பற்றுதல் போன்ற நடைமுறைகளை மேற்கொண்டு வளர்ச்சி சார்ந்த பிரச்சனைகளை எதிர்கொள்ளலாம் என பேசியுள்ளர்.